Images
  • family violence (2)
    (படம்: AFP/Ina FASSBENDER)

குடும்ப வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவரக் கூடுதல் முயற்சிகள்

குடும்ப வன்முறை குறித்த அக்கறைகள் அதிகரித்து வரும் வேளையில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் கூடுதல் முயற்சிகளை எடுத்து வருகிறது.

சுமார் 50 மருந்தாளர்கள், தங்கள் வாடிக்கையாளர்கள் துன்புறுத்தலுக்கு ஆளான அறிகுறிகளைக் கண்டறிய நாளை பயிற்சி பெறவுள்ளனர்.

குடும்ப வன்முறைக்கு ஆளானதாக நம்பப்படுவோர் உதவி நாடக்கூடிய நேரடித் தொலைபேசிச் சேவைகளை அவர்கள் பரிந்துரைப்பர்.

அதன் தொடர்பில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, Unity மருந்தகம், The Body Shop ஆகிய கடைகளுடன் இணைந்து செயல்படவுள்ளது.

அந்த முயற்சியில் சமயக் குழுக்களும் ஈடுபட்டுள்ளன.

இதுவரை 200க்கும் அதிகமான இஸ்லாமியச் சமய போதகர்கள், குடும்ப வன்முறை விழிப்புணர்வில் பயிற்சி பெற்றுள்ளனர்.

அத்தகைய கூடுதல் நேரடித் தொடர்புகள், பாதிக்கப்பட்டோர் ஆரம்பத்திலேயே உதவி பெறுவதற்கு வழிவகுக்கும்.

குடும்ப வன்முறை தொடர்பான, அமைப்புகளுக்கு இடையிலான பணிக்குழுவின் இணைத் தலைவர் சுன் ஷுவெலிங் (Sun Xueling) அதனைத் தெரிவித்தார்.

குடும்ப வன்முறைப் பிரச்சினை, கொரோனா கிருமிப்பரவலுக்கு அப்பாற்பட்டது என்று கூறிய அவர், அதன் தொடர்பில் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் சமூகப் பங்காளிகளின் கலந்துரையாடல் நடைபெறும் என்றார்.

அதில் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும்.  

Top