Images
  • fandi apologize (1)
    (படம்:Goh Chiew Tong)

நிருபரிடம் தெரிவித்த கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டார் காற்பந்து பயிற்றுவிப்பாளர் ஃபாண்டி

சிங்கப்பூர்க் காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளர் ஃபாண்டி அஹ்மாட், சீக்கிய செய்தியாளரிடம் தாம் தெரிவித்த கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

கடந்த வாரம் ஆறாம் தேதி சிங்கப்பூருக்கும் மொரீஷியஸுக்கும் இடையிலான ஆட்டத்துக்கு முன்னர் செய்தியாளர் கூட்டம் நடந்தது.

அதில் ஃபாண்டி, முண்டாசு தொடர்பில் முன்வைத்த கருத்துகள் சீக்கிய சமூகத்துக்கு வருத்தமளித்திருப்பதாக சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கம் தெரிவித்தது.

நியூ பேப்பர் செய்தியாளர் டிலென்ஜிட் சிங்கையும் சீக்கிய ஆலோசனைக் குழுவையும் ஃபாண்டியும் சங்கமும் தொடர்புகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் குறித்த விளக்கத்தையும் மன்னிப்பையும் நிருபர் ஏற்றுக்கொண்டதாகச் சங்கம் கூறியது.

ஃபாண்டியின் கருத்துகள் தீய எண்ணத்தால் கூறப்பட்டவை அல்ல என்றபோதும் சீக்கிய சமூகத்தை அது பாதிக்கலாம் என்று புரிந்துகொண்டதாகவும் சங்கம் சொன்னது.

ஒஏசியா ஹோட்டலில் நடந்த செய்தியாளர்க் கூட்டத்தில் திரு.டிலென்ஜிட் கேட்ட கேள்விக்கு ஃபாண்டி கூறிய பதிலுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இணையத்தில் கோரிக்கை மனு பகிரப்பட்டு வந்தது.

ஃபாண்டி கூறிய கருத்துகளைக் கூறியபோது அங்கிருந்தவர்கள் சிரித்ததும் முறையல்ல என்றும் புகார்மனு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.



Top