Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தானியக்க உணவு விற்பனை நிறுவனமான Fastbeeஇன் செயல்பாடுகள் நாளை முடிவு

கடும்போட்டிக்கு இடையே சந்தையில் நிலைத்து நிற்கும் நிறுவனங்கள் எத்தனை?

வாசிப்புநேரம் -
தானியக்க உணவு விற்பனை நிறுவனமான Fastbeeஇன் செயல்பாடுகள் நாளை முடிவு

(படம்: Tang See Kit)

இப்போது எங்கு பார்த்தாலும் பலவிதமான தானியக்க விற்பனை இயந்திரங்கள் உள்ளன.

கடும்போட்டிக்கு இடையே சந்தையில் நிலைத்து நிற்கும் நிறுவனங்கள் எத்தனை?

உணவங்காடி நிலையக் கடைகளின் உணவினை விற்பனை செய்த Fastbee நாளை அதன் செயல்பாடுகளை நிறுத்துகிறது.

அதன் நிறுவனர் கூ கார் கியாட் நிதி திரட்டுவதில் சிரமத்தை எதிர்நோக்கியதால் செயல்பாடுகளை நிறுத்தவிருப்பதாக சேனல் நியூஸ்ஏஷியாவிடம் கூறினார்.

கடந்த ஆண்டு அந்நிறுவனம் அறிமுகம் கண்டது.

செயலியில் வாடிக்கையாளர்கள் மதிய உணவைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். பின்னர் மேற்குப் பகுதியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் தானியக்க உணவு விற்பனை இயந்திரங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் உணவைப் பெற்றுக்கொள்ளலாம்.

உணவைக் கொண்டு சேர்ப்பதற்காக வசூலிக்கப்படும் $1.50ஐ மட்டுமே Fastbee கட்டணமாக எடுத்துக்கொண்டது.

விநியோகம் செய்ய 7 ஊழியர்கள்; வெவ்வேறு பகுதிகளில் 10 இயந்திரங்கள். பிரபலமான காலத்தில் காலாண்டுக்கு 10,000 உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்தது Fastbee.

எனினும் லாபம் ஈட்டுவதற்கு முதலீடு தேவைப்பட்டது.

அது கிடைக்கவில்லை என்று 34 வயது திரு கூ சொன்னார்.

இயந்திரங்களின் எண்ணிக்கையைக் குறைத்தது. கையில் உள்ள இருப்பு குறைய இப்போது போதிய வளமில்லை என்று அவர் கூறினார்.

GrabFood, Plum போன்ற புதிய நிறுவனங்கள் தலைதூக்க உணவு விநியோகச் சந்தையில் போட்டி கடுமையாகிறது.

உணவுக் கழிவு, சிறப்புச் சலுகைகள் போன்றவை வழங்கப்படவில்லை என்றால் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது மிகக் கடினம் என்று திரு கூ கூறினார்.

இந்நிலை தொடர்ந்தால் சிறிய நிறுவனங்கள் இழப்பை எதிர்நோக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்