Images
  • Uk passport
    படம்: REUTERS/Francois Lenoir/Illustration

தகுதிபெறும் பிரிட்டிஷ் பயணிகளுக்கு மேலும் விரைவான குடிநுழைவுச் சோதனை

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

சிங்கப்பூருக்கு வரும் பிரிட்டிஷ் கடப்பிதழைக் கொண்ட தகுதிபெறும் பயணிகள் இனி குடிநுழைவு நடைமுறைகளை இன்னும் சீக்கிரமாக முடிக்க முடியும்.

Frequent Traveller Programme எனும் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கான திட்டம் பிரிட்டிஷ் கடப்பிதழைக் கொண்ட தகுதிபெறும் பயணிகளுக்கும் ஏப்பெக் எனப்படும் ஆசிய பசிபிக் பொருளியல் அமைப்பின் வர்த்தகப் பயண அட்டை கொண்ட அனைவருக்கும் விரிவுபடுத்தப்படும்.

இன்று நடப்புக்கு வந்த அம்மாற்றத்தைப் பற்றி குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கான திட்டத்துக்கு விண்ணப்பம் செய்யவிரும்பும் பிரிட்டிஷ் மக்கள் 6 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அதோடு அவர்களின் கடப்பிதழ் 6 மாதத்துக்கு மேற்பட்ட செல்லுபடிக் காலத்தைக் கொண்டிருக்க வேண்டும். 

மேலும் கடந்த ஈராண்டில் அவர்கள் சிங்கப்பூருக்கு இருமுறையாவது வந்திருக்க வேண்டும்.

சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முணையத்தில் இருக்கும் பதிவு நிலையங்கள், குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய கட்டடத்தின் வருகையாளர் சேவை நிலையம், உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகள் ஆகியவற்றில் திட்டத்தில் சேர விண்ணப்பம் செய்யலாம்.


Top