Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரும் சீனாவும், அத்தியாவசியப் பயணங்களுக்கான 'விரைவுத் தட' ஏற்பாடு

சிங்கப்பூரும் சீனாவும், அத்தியாவசியப் பயணங்களுக்கான 'விரைவுத் தட' ஏற்பாடு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரும் சீனாவும், அத்தியாவசியப் பயணங்களுக்கான 'விரைவுத் தட' ஏற்பாடு

(படம்: REUTERS/Edgar Su/Files)

சிங்கப்பூரும் சீனாவும், அத்தியாவசியப் பயணங்களுக்கான விரைவுத் தட ஏற்பாட்டை, அடுத்த மாத முற்பகுதியில் அறிமுகம் செய்ய இணங்கியுள்ளன.

வெளியுறவு அமைச்சு விடுத்த அறிக்கை,அதனைத் தெரிவித்தது.

அவசியமான வர்த்தகப் பயணங்களுக்கும், இருநாட்டு அதிகாரிகளின்
அதிகாரத்துவப் பயணங்களுக்கும் அந்த ஏற்பாடு வழிவகுக்கும்.

ஷங்ஹாய் (Shanghai), தியான்ஜின் (Tianjin), சோங்கிங் (Chongqing), குவாங்டாங் (Guangdong), ஜியாங்சு (Jiangsu), ஸெச்சியாங் (Zhejiang)
ஆகிய ஆறு மாநிலங்களுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் விரைவுப் பயணத் தட ஏற்பாடு நடப்புக்குவரும்.

படிப்படியாக அது, சீனாவின் ஏனைய மாநிலங்களுக்கும் நகரமன்றங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் தடையற்ற விநியோகத்தைச் சீர்படுத்தும் முயற்சிகளிலும் இருதரப்பும் இணக்கம் கண்டன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்