Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19: சிங்கப்பூரின் சிறு நிறுவனங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் Facebook

சிங்கப்பூரில் கிருமிப்பரவலால் பாதிக்கப்பட்ட சிறு நிறுவனங்களுக்கு உதவ, Facebook சுமார் 4.75 மில்லியன் வெள்ளி மானியம் வழங்கவுள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19: சிங்கப்பூரின் சிறு நிறுவனங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் Facebook

(படம்: REUTERS/Dado Ruvic)

சிங்கப்பூரில் கிருமிப்பரவலால் பாதிக்கப்பட்ட சிறு நிறுவனங்களுக்கு உதவ, Facebook சுமார் 4.75 மில்லியன் வெள்ளி மானியம் வழங்கவுள்ளது.

இருவரிலிருந்து 50 பேர் வரை வேலை செய்யும் 800 உள்ளூர் நிறுவனங்கள் அதன் மூலம் பயனடையலாம். 

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 5,500 வெள்ளி மானியம் கொடுக்கப்படும்.

அதில் 3,500 வெள்ளி ரொக்கமாகவும், 2,000 வெள்ளி விளம்பரத் தொகையாகவும் வழங்கப்படும்.

மானியம் பெறுவதற்கு வரும் 22 ஆம் தேதியிலிருந்து நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். 

ஓராண்டுக்கு மேல் செயல்பட்டு, கிருமிப்பரவலால் வர்த்தகம் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் மானியத்துக்குத் தகுதி பெறும் என்று
Facebook கூறியது.

உலக அளவில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 30,000 நிறுவனங்களுக்கு 100 மில்லியன் டாலர் மானியம் வழங்குகிறது Facebook.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்