Images
  • fender
    (படம்: Facebook/Srikandi Malaya)

ஜொகூர் இரண்டாம் இணைப்புப் பாதையில் விபத்தால் மூண்ட கைகலப்பு

துவாஸிலிருந்து ஜொகூருக்கு இட்டுச் செல்லும் இரண்டாம் இணைப்புப் பாதையில் ஆடவர் ஒருவர் மற்ற இருவரால் தாக்கப்படும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.

சந்தேக நபர்கள் இருவரில் ஒருவர், முதலில் காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துள்ள ஒருவரைத் தாக்குகிறார். பின்னர் இரண்டாவது சந்தேக நபர், கார்க் கதவை அந்த ஆடவர் மீது அறைந்து சாத்த முயல்வது காணொளியில் தெரிகிறது.


காலை 7.30 மணியளவில் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததாக ஜொகூர் காவல்துறை தெரிவித்தது. காணொளியில் தாக்கப்பட்டவர், முப்பது வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூர் ஆடவர் என்று நம்பப்படுகிறது.

அவர், இஸ்கந்தர் புத்தேரி மாவட்டக் காவல்துறையிடம் புகார் செய்துள்ளார். சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

முதற்கட்ட விசாரணையின்படி, தாக்கப்பட்ட ஆடவர் செலுத்திய கார், சந்தேக நபர்கள் இருவர் பயணம் செய்த கார் மீது மோதியதாகத் தெரிகிறது.  

Top