Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதுவகையான வேலைவாய்ப்பு மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

 காவல்துறையினர், Filmgo என்ற பெயரில் மோசடி செய்யும் சில நிறுவனங்களைப் பற்றிப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
புதுவகையான வேலைவாய்ப்பு மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

(கோப்புப் படம்: Calvin Oh)

காவல்துறையினர், Filmgo என்ற பெயரில் மோசடி செய்யும் சில நிறுவனங்களைப் பற்றிப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திரைப்பட நுழைவுச்சீட்டுகளை வாங்கி விற்பது என்ற அடிப்படையில் இம்மாதம் மட்டும் இதுவரை 41 பேர் வேலைவாய்ப்பு மோசடிக்கு ஆளானதாகக் காவல்துறை தெரிவித்தது.

அதில் குறைந்தது 203,000 வெள்ளி மோசடி செய்யப்பட்டிருக்கலாம் எனக் காவல்துறை குறிப்பிட்டது.

அதுபோன்ற சம்பவங்களில் மோசடிக்காரர்கள் MiChat, WeChat போன்ற குறுந்தகவல் தளங்களில் சிலருடன் நட்பு கொள்வார்கள். பின்னர் அவர்கள் பணம் சம்பாதிக்க நுழைவுச்சீட்டு வாங்கி விற்கும் வேலை அறிமுகம் செய்யப்படும்.

அதன் அடிப்படையில் Filmgo Production, Filmgo Digital போன்ற (போலி) நிறுவனங்களின் இணையப்பக்கத்தில் பாதிக்கப்படுபவர்கள் பதிவு செய்துகொள்வர்.

அதில், தெரியாத நபர்களின் வங்கிக் கணக்குகள் அளிக்கப்படும். அவற்றில் பணத்தைச் சேர்க்கும்படிக் கேட்டுக்கொள்ளப்படும்.

இணையப்பக்கத்தில் நம்பகமான அம்சங்கள் இருப்பதால் அதில் வேலைபார்ப்பவர்கள், வேலை உண்மையானது என நம்பலாம்.

அத்தகைய சம்பவங்களில் விழிப்புடன் இருக்கும்படிக் காவல்துறையினர் கேட்டுக்கொள்கின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்