Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி வழங்கியதை ஒப்புக்கொண்ட சிங்கப்பூர் ஆடவர்

பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி வழங்கியதைச் சிங்கப்பூர் ஆடவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி வழங்கியதை ஒப்புக்கொண்ட சிங்கப்பூர் ஆடவர்

(படம்: CNA)

பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி வழங்கியதைச் சிங்கப்பூர் ஆடவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் துருக்கியில் இருக்கும் ஓர் ஆடவருக்கு 450 வெள்ளி அனுப்பியதை இம்ரான் ஒப்புக்கொண்டார்.

தாம் சிங்கப்பூர்ச் சட்டத்தை மதிக்கவில்லை என்றும் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை மட்டுமே மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பணம் அனுப்பியதை மட்டுமே தம்மால் ஒப்புக்கொள்ள முடியும், மாறாக, அந்தக் குற்றத்தை ஒப்புக்கொள்ள முடியாது என்றார் அவர்.

சிங்கப்பூர் குடிமகனாக இங்கு வாழும் அவர், சிங்கப்பூரின் சட்டத்தை மதிக்கவில்லை என்பதால் அவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

பிற்பகலில் அவருக்குத் தண்டனை விதிக்கப்படும்.

இம்ரானுக்குப் பத்தாண்டு வரை சிறைத்தண்டனையோ, 500,000 வெள்ளி வரை அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்