Images
  • financial management seminar
    (படம்: progresstogether.sg)

நிதி நிர்வாகம் பற்றி இந்தியச் சமூகத்தினருக்கு எடுத்துரைக்கும் இலவசக் கருத்தரங்கு

நிதி நிர்வாகம் பற்றி இந்தியச் சமூகத்தினருக்கு எடுத்துரைக்க சிறப்புக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு அனுமதி இலவசம்.

அத்தகைய கருத்தரங்கிற்கு 120 வெள்ளி கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம்.

இம்மாதம் 23ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி அரங்கில் கருத்தரங்கு நடைபெறும்.

"Let's progress together" எனும் தலைப்பிலான கருத்தரங்கு, ஆங்கிலத்திலும், தமிழிலும் இடம்பெறுகிறது.

அதில் கலந்துகொள்ள progresstogether.sg இணையபக்கத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

முதலீடு, திட்டம், சேமிப்பு, இலாபம் ஆகிய நிதி தொடர்பான தகவல்கள் கருத்தரங்கில் இடம்பெறவிருக்கின்றன.

துணைப் பிரதமரும், பொருளியல் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு. தர்மன் சண்முகரத்னம் கருத்தரங்கில் சிறப்புரையாற்றுகிறார். 

Top