Images
  • mango
    படம்: Pixabay 

சிங்கப்பூரில் மரத்திலிருந்து விழுந்த பழத்தை எடுத்தால் அபராதம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

அரசாங்க நிலத்தில் உள்ள மரங்களிலிருந்து அனுமதியின்றிப் பழங்களைப் பறித்தாலோ எடுத்தாலோ 5,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிலத்தில் உள்ள மரங்களின்  பழங்கள் யாருக்குச் சொந்தம், மரத்திலிருந்து விழுந்த பழத்தை எடுத்தாலோ பறித்தாலோ என்ன தண்டனை விதிக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட் கேள்வி எழுப்பினார்.

அவரது கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் அவ்வாறு குறிப்பிட்டார்.

அரசாங்க நிலத்தில் உள்ள பெரும்பாலான மரங்களை தேசியப் பூங்கா வாரியம் நிர்வகிக்கிறது. மரத்திலிருந்து விழுந்த பழத்தை எடுக்கவோ பழத்தை மரத்திலிருந்து பறிக்கவோ வாரியத்திடமிருந்து உரிய அனுமதியைப் பெற வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறுவோருக்குப் பூங்காக்கள் மற்றும் மரங்கள் சட்டத்தின்கீழ் அபராதம் விதிக்கப்படும் என்றார் அமைச்சர் லாரன்ஸ் வோங்.


Top