Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

NEA அதிகாரியைத் திட்டிய ஆடவருக்கு அபராதம்

ஆர்ச்சர்ட் ரோட்டில் ஆடவர் ஒருவர், அதிகாரியை வாய்க்கு வந்தபடி திட்டியதால், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

வாசிப்புநேரம் -

ஆர்ச்சர்ட் ரோட்டில் ஆடவர் ஒருவர், அதிகாரியை வாய்க்கு வந்தபடி திட்டியதால், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதியன்று, 313 Somerset கடைத்தொகுதிக்கு அருகில் உள்ள திறந்தவெளிக் கார் நிறுத்துமிடத்தில், கெனத் டான் (Kenneth Tan) என்னும் அந்த 31 வயது ஆடவர் புகைபிடித்துக்கொண்டிருந்தார்.

அது ஒரு புகையற்ற பகுதி.

ஆகவே, அங்கு பணியில் இருந்த தேசியச் சுற்றுப்புற அமைப்பு அதிகாரிகள் இருவர் சென்று அழைப்பாணை அனுப்புவதற்கு அவரது அடையாள விவரத்தைக் கேட்டனர்.

அதற்கு அவர், தமது அடையாள அட்டையை எடுத்துத் தம்முடைய காரின் முன்புறம் வீசி எறிந்து, அதிகாரிகளை நோக்கித் தகாத வார்த்தைகளில் ஏசினார்.

நான் ஓடினால் நீ என்னை எவ்வாறு பிடிப்பாய்?

என நையாண்டிசெய்து திட்டினார்.

பாதிக்கப்பட்ட அதிகாரி ஆர்ச்சர்ட் வட்டாரக் காவல் நிலையத்திடம் புகார் செய்தார்.

பொதுச்சேவை அதிகாரியிடம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதன் தொடர்பில் கெனத் டானுக்கு இன்று 1,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்