Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சுங்காய் தெங்கா வட்டாரத்தில் பற்றியெரியும் நெருப்பு

சுங்காய் தெங்கா (Sungei Tengah) வட்டாரத்தில் பற்றியெரியும் நெருப்பை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பாளர்கள் 50 பேர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
சுங்காய் தெங்கா வட்டாரத்தில் பற்றியெரியும் நெருப்பு

(படம்:SCDF)

சுங்காய் தெங்கா (Sungei Tengah) வட்டாரத்தில் பற்றியெரியும் நெருப்பை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பாளர்கள் 50 பேர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பின்னிரவு 1.30 மணி அளவில் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.

தோட்டக் கழிவுகள் சேர்த்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் தீ மூண்டது.

ஒரு காற்பந்துத் திடலுக்குச் சமமான அந்த இடம், கழிவுகள், நான்கு மாடிக் கட்டடம் உயரம் அடுக்கப்பட்டிருந்தன.

தீயை அணைக்கும் பணி இன்னமும் தொடர்கிறது.

தொடர்ந்து மெதுவாக எரிந்து கொண்டேயிருக்கும் கழிவுகள், உலர்ந்த காய்கறிக் கழிவுகள், காற்று வீசும் சூழல் ஆகியவற்றின் காரணமாகத் தீயை அணைக்கும் முயற்சியில் தேக்கம் நிலவுகிறது.

ஏழு அவசரகால வாகனங்களும், ஐந்து தண்ணீர் தெளிக்கும் வாகனங்களும் தீயணைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

எரியும் பொருள்களுக்கு இடையே இடைவெளி ஏற்படுத்தி
நெருப்பு மேலும் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்