Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் Firefly விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன

மலேசியாவின் மலிவுக் கட்டண விமானச் நிறுவனமான Firefly சிங்கப்பூருக்கான சேவைகளை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

மலேசியாவின் மலிவுக் கட்டண விமானச் நிறுவனமான Firefly சிங்கப்பூருக்கான சேவைகளை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

சுபாங் விமான நிலையத்தில் புறப்பட்ட FY3126 விமானம் இன்று காலை பதினோரு மணியளவில் புதுப்பிக்கப்பட்ட சிலேத்தார் விமான நிலையத்தை வந்தடைந்தது.

மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையே ஆகாயவெளி நிர்வாகம் தொடர்பிலான சர்ச்சைக்குத் தீர்வுகாண அண்மையில் உடன்பாடு செய்துகொள்ளப்பட்டதையடுத்து, இரு நாடுகளுக்கிடையே Firefly விமானச் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

இன்றைய முதல் விமானத்தில் மலேசியப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் வந்திருந்தார்.

சிங்கப்பூர்ப் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான், சிலேத்தார் விமான நிலையத்தில் அவரை வரவேற்றார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்