Images
  • sg covid (13)
    படம்: AFP/Roslan Rahman

சிங்கப்பூரில் ஒரு மாதத்திற்கு பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் COVID-19 நோயாளி

சிங்கப்பூரில் தீவிர சிகிச்சைப் பிரிவில் COVID-19 நோயாளி ஒருவர் பராமரிக்கப்படுவதாக நேற்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

முன்னர், அக்டோபர் 11-ஆம் தேதி, தீவிர சிகிச்சைப் பிரிவில் COVID-19 நோயாளி இருப்பது பதிவானது.

சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு இப்போது ஒருவர் அங்கு சிகிச்சை பெறுகிறார்.

சிங்கப்பூரில் நேற்று மேலும் 6 பேர், கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து இருப்பிடம் திரும்பினர்.

அவர்களையும் சேர்த்து இங்கு முழுமையாக உடல் நலம் தேறியோர் எண்ணிக்கை மொத்தம் 58,052.

மருத்துவமனைகளில் 28 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

மேலும் 31 பேர் சமூகத் தனிமைப்படுத்தும் வசதிகளில் உள்ளனர். 

Top