Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் முதல் காவல் நிலையம்

சிங்கப்பூர்க் காவல்துறை இவ்வாண்டு அதன் 200ஆண்டு நிறைவை அனுசரிக்கிறது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் முதல் காவல் நிலையம்

(படம்: Singapore Police Force/Facebook)

சிங்கப்பூர்க் காவல்துறை இவ்வாண்டு அதன் 200ஆண்டு நிறைவை அனுசரிக்கிறது.

அதன் தொடக்கம் எப்படி இருந்தது? முதல் காவல் நிலையம் எப்படி இருந்தது?

காவல்துறைப் பிரிவு 1820-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

அச்சமயத்தில் வணிகத் துறைமுகமாகச் செயல்படத் தொடங்கிய சிங்கப்பூரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியேறிகளும் ஊழியர்களும் இருந்தனர்.

சட்டத்தை நிலைநாட்டவும் குற்றங்களைத் தடுக்கவும் காவல்துறை அமைக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது.

சிங்கப்பூர் ஆற்றில் அரசாங்கக் கட்டடங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அத்தாப்புக் குடில் ஒன்று கட்டப்பட்டது. அதுவே முதல் காவல் நிலையமாகச் செயல்பட்டது.

காவல்துறைப் பிரிவில் 12 உறுப்பினர்கள் இருந்தனர்.

சிங்கப்பூர் ஆற்றின் நுழைவாயிலில் அமைந்திருந்த காவல் நிலையத்தின்மூலம் ஆற்றுப் பகுதியில் இடம்பெற்ற வணிக நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடிந்தது.

காவல் நிலையம் 1823-ஆம் ஆண்டு வரை அங்கு இயங்கியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்