Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சீனப் புத்தாண்டின்போது வழக்கமான மீன் விலை உயர்வை எதிர்பார்க்கலாம்: வியாபாரிகள்

சீனப் புத்தாண்டின்போது மீன் விலை உயர்வுக்கு, பொதுவில் அதிகமான தேவையே காரணம் என்றும், மலேசிய அரசாங்கம் விதிக்கும் தடைகள் காரணமல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சீனப் புத்தாண்டின்போது வழக்கமான மீன் விலை உயர்வை எதிர்பார்க்கலாம்: வியாபாரிகள்

படம்: AFP

சீனப் புத்தாண்டின்போது மீன் விலை உயர்வுக்கு, பொதுவில் அதிகமான தேவையே காரணம் என்றும், மலேசிய அரசாங்கம் விதிக்கும் தடைகள் காரணமல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு மீன், இறாலின் விலை உயரும் என்றாலும் அந்த விலை உயர்வு முன்னைய ஆண்டுகளைவிட அதிகம் வேறுபட்டிருக்காது என்று மீன் வியாபாரிகள் கூறுகின்றனர்.

மலேசியா அண்மையில் அறிவித்த மீன் ஏற்றுமதித் தடையால் விலைகள் கணிசமாக அதிகரிக்கமாட்டா என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

மலேசியாவில் பருவமழைக் காலத்திலும் விழாக்காலத்திலும் ஏற்படக்கூடிய பற்றாக்குறையை ஈடுசெய்ய 4 வகையான மீன்கள், இறாலின் ஏற்றுமதியைத் தடைசெய்யவிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் நேற்று முன்தினம் அறிவித்தது.

அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து பிப்ரவரி இறுதி வரை அந்தத் தடை நடப்பில் இருக்கும்.

எனினும் அத்தகைய தடைகள் கடந்த சில ஆண்டுகளாக விதிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் அவற்றால் ஏற்படக்கூடிய பற்றாக்குறையைச் சரிசெய்ய மாற்றுவழிகளைத் தொழில்துறை கையாண்டு வந்துள்ளதாகவும் சிங்கப்பூரின் பொங்கோல் மீன் வியாபாரிகள் சங்கம் தெரிவித்தது.

வழக்கமாக சில வியாபாரிகள் மீன்களை உறைகலனில் வைத்திருப்பதால், விலைகளில் தாக்கம் ஏற்படாது எனச் சங்கம் கூறியது.

முறையான உறையவைக்கும் நுட்பங்களால் மீன்களின் தரத்தைக் கட்டிக்காக்க முடியும் என்றும் அது சொன்னது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்