Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மலேசியாவின் சிலவகை மீன், இறால் தடையால் சிங்கப்பூரில் பாதிப்பில்லை - வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம்

மலேசியாவின் சிலவகை மீன், இறால் தடையால் சிங்கப்பூரின் கடல் உணவு விற்பனையில் பாதிப்பில்லை என வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் இன்று (டிசம்பர் 19) மீடியாகார்ப் “செய்தி”யிடம் தெரிவித்தது.

வாசிப்புநேரம் -

மலேசியாவின் சிலவகை மீன், இறால் தடையால் சிங்கப்பூரின் கடல் உணவு விற்பனையில் பாதிப்பில்லை என வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் இன்று (டிசம்பர் 19) மீடியாகார்ப் “செய்தி”யிடம் தெரிவித்தது.

தடை குறித்த விவரத்தை, மலேசியா கடந்த அக்டோபர் மாதம் தன்னிடம் தெரிவித்ததாக ஆணையம் குறிப்பிட்டது.

மலேசியாவின் இத்தகைய ஏற்றுமதித் தடை, கடந்த 6 ஆண்டுகளாய் நடப்பிலிருப்பதாகவும் ஆணையம் தெரிவித்தது.

பருவமழைக் காலத்தில் மீன்களின் வரத்து குறைவதும், விழாக் காலத்தில் மீன்களின் தேவை அதிகரிப்பதும் அதற்கான முக்கியக் காரணம்.

கடந்த சில ஆண்டுகளின் அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கையில் ஏற்றுமதித் தடையால் பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது என ஆணையம் குறிப்பிட்டது.

மலேசியாவைத் தவிர்த்து மற்ற நாடுகளிலிருந்தும் கடல் உணவு வகைகள் இறக்குமதி செய்யப்படுவதே அதற்குக் காரணம்.

நிலைமையை அணுக்கமாய்க் கண்காணித்து வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்