Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Fitbit சாதனங்களைப் பயன்படுத்தி ரயில், பேருந்து கட்டணங்களைச் செலுத்தலாம்

பயணிகள் தங்களின் Fitbit சாதனங்களைப் பயன்படுத்தி ரயில்,பேருந்து ஆகியவற்றுக்கான கட்டணங்களை இனி செலுத்த முடியும். கையில் Fitbit சாதனத்தை அணிந்தவாறு கட்டணங்களைக் கட்டலாம்.

வாசிப்புநேரம் -
Fitbit சாதனங்களைப் பயன்படுத்தி ரயில், பேருந்து கட்டணங்களைச் செலுத்தலாம்

படம்: TODAY

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பயணிகள் தங்களின் Fitbit சாதனங்களைப் பயன்படுத்தி ரயில்,பேருந்து ஆகியவற்றுக்கான கட்டணங்களை இனி செலுத்த முடியும். கையில் Fitbit சாதனத்தை அணிந்தவாறு கட்டணங்களைக் கட்டலாம்.

OCBC, United Overseas Bank Mastercard வாடிக்கையாளர்கள் அந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.

Fitbitஇன் மின்-பணப்பை அனைத்து Ionic, Versa, Charge 3 ரக மாதிரிகளிலும் உள்ளது.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் SimplyGo திட்டத்தின் ஓர் அங்கமாக புதிய சேவை இடம்பெறுகிறது.

பயணக் கட்டணங்களைச் செலுத்துவதற்காகத், தனியாக ஓர் அட்டையைக் கொண்டுசெல்வதற்கும், அதில் முன்கூட்டியே பணம் நிரப்புவதற்குமான தேவை இருக்காது என நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்