Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இரண்டாம் கட்டத்தில் 5 பேர் வரை ஒன்றுகூடலாம்

அதிரடித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தளர்த்தப்படும்போது 5 பேர் வரை ஒன்றுகூட முடியும். 

வாசிப்புநேரம் -
இரண்டாம் கட்டத்தில் 5 பேர் வரை ஒன்றுகூடலாம்

படம்: AFP/Roslan Rahman

அதிரடித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தளர்த்தப்படும்போது 5 பேர் வரை ஒன்றுகூட முடியும்.

சில்லறை வர்த்தகக் கடைகள், வாடிக்கையாளர் சேவைகள், விளையாட்டு வசதிகள் ஆகியவை 2ஆம் கட்டத்தில் திறக்கப்படும்.

அப்போது ஐவர் வரை ஒரு குழுவாகக் கூடலாம். உணவகங்களில் 5 பேர் வரை அமர்ந்து உணவு உண்ணலாம்.

சமூக ஒன்றுகூடலுக்கும் குடும்பங்களைச் சந்திக்க வீடுகளுக்குச் செல்லவும் அனுமதி வழங்கப்படும். ஆனால் அந்த எண்ணிக்கை ஐந்தைத் தாண்டக்கூடாது.

அரும்பொருளகங்கள், இரவு நேரக் கேளிக்கைக் கூடங்கள், திரையரங்குகள் ஆகியவற்றை மீண்டும் திறப்பது குறித்து அரசாங்கம் கவனமாகப் பரிசீலிக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நடைமுறைகள் நடப்பில் இருந்தால் மட்டுமே அவை மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்படும் என்றார் திரு. வோங்.

இரண்டாம் கட்டத்தின் தொடக்கத்தில் அவை திறக்கப்படும் சாத்தியம் குறைவு. ஆனால் இரண்டாம் கட்டத்தின் முடிவில் அவற்றைத் திறக்கும் சாத்தியம் உள்ளது என்றார் திரு. வோங்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்