Images
  • flash floods SG (1)
    (படம்: Facebook/SG Road Vigilante)

புக்கிட் பாத்தோக், சுவா சூ காங் வட்டாரங்களில் திடீர் வெள்ளம்

கனத்த மழையினால் புக்கிட் பாத்தோக், சுவா சூ காங் வட்டாரங்களில் இன்று (நவம்பர் 10) மாலை திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

சுவா சூ காங் வேயிலிருந்து சுவா சூ காங் அவென்யூ 1 வரையிலும் புக்கிட் பாத்தோக் மோட்டார்வாகனப் பயிற்சி நிலையத்திலிருந்து புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 5 வரையிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் கூறியது.

புக்கிட் பாஞ்சாங்கில் மாலை மணி 4.40-இலிருந்து 6 மணி வரை 100 மில்லிமீட்டர் மழை பதிவானது.

நவம்பர் மாதம் முழுதும் பெய்யக்கூடிய சராசரி மழையளவில் அது 40 விழுக்காடு எனக் கழகம் குறிப்பிட்டது.

நிலைமையைப் பார்வையிட திடீர் வெள்ளம் ஏற்பட்ட வட்டாரங்களுக்குத் தனது அதிகாரிகள் சென்றதாகவும் பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.
 

Top