Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இணைய ஊடுருவிகளுக்குச் சவால் விடுக்கும் உள்ளூர்த் தொழில்நுட்ப நிறுவனம்

இணைய ஊடுருவிகள், தகவல்களைத் திருடுவதைக் கடினமாக்கும் புதிய கருவியை உள்ளூர்த் தொழில்நுட்ப நிறுவனம் Flexxon உருவாக்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
இணைய ஊடுருவிகளுக்குச் சவால் விடுக்கும் உள்ளூர்த் தொழில்நுட்ப நிறுவனம்

(கோப்புப் படம்: REUTERS/Kacper Pempel/Illustration)

இணைய ஊடுருவிகள், தகவல்களைத் திருடுவதைக் கடினமாக்கும் புதிய கருவியை உள்ளூர்த் தொழில்நுட்ப நிறுவனம் Flexxon உருவாக்கியுள்ளது.

இணையப் பாதுகாப்பு மிரட்டல்களைத் தானாகவே கண்டறிந்து அதனை முடக்கும் கணினிக் கருவியின் பெயர் X-Phy.

தற்போது அது அரசாங்க அமைப்புகளிலும் மற்ற நிறுவனங்களிலும் சோதிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீங்கு விளைவிக்கும் மென்பொருள் பாதிப்பு போன்றவற்றை உரிமையாளர்களிடம் தெரிவிக்கும் திறனை X-Phy பெற்றுள்ளது.

மோசடிச் சம்பவம் தென்பட்டவுடன், தகவல்கள் உடனடியாக முடக்கப்படும்.

உரிமையாளர் அனுமதியோடு மட்டுமே அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியும்.

இதுபோன்ற கண்டுபிடிப்புகள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப அச்சுறுத்தல்களைச் சமாளிக்க முக்கியம் என்று அறிவார்ந்த தேசத் திட்டத்துக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்