Images
  • gbb

கிறிஸ்துமஸ் கலையுடன் பூத்துக் குலுங்கும் கரையோரப் பூங்கா

கிறிஸ்துமஸுக்கு இப்போதே தயாராகிவிட்டது கரையோரப் பூங்காவின் Flower Dome பூந்தோட்டம்.

நேற்று (நவம்பர் 8) பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்ட Poinsettia Wishes கண்காட்சி சுமார் 7,500 Poinsettia செடிகளைக் கொண்டுள்ளது. 30 வகைகளைச் சேர்ந்த அந்தச் செடிகள் கிறிஸ்துமஸின் சின்னமாகக் கருதப்படுகிறது.


கண்கவர் வண்ணங்களில் உள்ள ஐரோப்பியச் செடிகளைச் சிங்கப்பூரில் ரசிக்கும் வாய்ப்பு இயற்கை ஆர்வலர்களுக்குக் கிட்டியுள்ளது.
டென்மார்க் தூதர் Dorte Bech Vizard கண்காட்சிக்கு வடிவம் கொடுத்துள்ளார். டென்மார்க், ஃபின்லந்து, ஐஸ்லந்து, நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளின் தனித்துவமான கட்டடங்களும் காட்சியில் இடம்பெறுகின்றன.


கரையோரப் பூங்காவின் Flower Dome பூந்தோட்டத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 5 வரை கண்காட்சி நடைபெறும். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காட்சி திறந்திருக்கும்.கட்டணம் பற்றிய மேல்விவரங்கள்: www.gardensbythebay.com.sg/poinsettia

Top