Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முதன்முறையாக மரினா பே வட்டாரத்தில் வலம் வந்தது பறக்கும் டாக்சி (காணொளி)

சிங்கப்பூரில் முதல்முறையாக பறக்கும் டாக்சி The Float@ Marina Bay-இலிருந்து பறக்கவிடப்பட்டது. சோதனை நடவடிக்கையாக அவை The Float@ Marina Bay-இலிருந்து இயக்கப்பட்டன. பிரிட்டிஷ் நிறுவனமான Skyports, ஜெர்மானிய நிறுவனமான Volocopter ஆகியவை இணைந்து புதிய Voloport திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளன.

வாசிப்புநேரம் -
முதன்முறையாக மரினா பே வட்டாரத்தில் வலம் வந்தது பறக்கும் டாக்சி (காணொளி)

படம்: சுதேஷினி தனராஜ்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரில் முதல்முறையாக பறக்கும் டாக்சி The Float@ Marina Bay-இலிருந்து பறக்கவிடப்பட்டது. சோதனை நடவடிக்கையாக அவை The Float@ Marina Bay-இலிருந்து இயக்கப்பட்டன. பிரிட்டிஷ் நிறுவனமான Skyports, ஜெர்மானிய நிறுவனமான Volocopter ஆகியவை இணைந்து புதிய Voloport திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளன.

Volocopter பறக்கும் டாக்சி முதன்முறையாக மரினா பே வட்டாரத்தை வலம்வந்து அதன் செயல்பாடுகளை வெளிக்காட்டியது.

அந்தப் பறக்கும் டாக்சியால் 450 கிலோ கிராம் எடை வரை  தூக்கிச் செல்ல முடியும். இரண்டு நபர்கள் வரை அதில் பயணம் செய்யலாம். 30 கிலோ மீட்டர் தூரம் வரை அந்த டாக்சிகளால் பறந்து செல்ல முடியும்.

எதிர்காலத்தில் அவை மரினா பே, செந்தோசா ஆகிய பகுதிகளுக்கு இடையிலும், சாங்கி விமான நிலையம் முதல் டௌன்டவுன் வட்டாரம் வரையிலும் சேவையாற்றக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்