Images
  • Flying Taxi (1)
    (படம்: Volocopter)

பறக்கும் டாக்சியைப் பயன்படுத்த விரும்பும் மக்கள்... அதிலுள்ள சவால்கள் என்னென்ன?

ஜெர்மனியின் Volocopter நிறுவனத்தின் பறக்கும் டாக்சி அண்மையில் மரினா பே வட்டாரத்தை வலம் வரச் செய்து மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

பொதுமக்கள் பறக்கும் டாக்சியைப் பயன்படுத்துவார்களா என்பதை அறிய 'செய்தி' இவ்வாரம் ஒரு கருத்தாய்வை நடத்தியது.

அதில் மொத்தம் 614 பேர் வாக்களித்தனர்.


பறக்கும் டாக்சியைப் பயன்படுத்துவோம் - 66.5%

பறக்கும் டாக்சியைப் பயன்படுத்தமாட்டோம் - 33.5%

பறக்கும் டாக்சிகள் என்றாலே, போக்குவரத்து நெரிசல் இல்லை, செல்லவேண்டிய இடத்திற்கு நேரத்தோடு செல்லலாம் என்று பலரும் எண்ணலாம். 

ஆனால், பறக்கும் டாக்சிகள் ஒரு போக்குவரத்து வழியாக மாறுவதற்குப் பல சவால்கள் உள்ளன.

பறக்கும் டாக்சிகளால் வெகு தூரம் பறக்கமுடியாது

டாக்சிகளில் உள்ள மின் கலனின் செயல் திறன் அவற்றை அரை மணி நேரம் வரை மட்டுமே பறக்க அனுமதிக்கும்.

Volocopter நிறுவனத்தின் பறக்கும் டாக்சி, அரை மணி நேரத்தில் 35 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே பறந்து செல்ல முடியும்.

பறக்கும் டாக்சிகள் நிறுத்த இடம் பற்றாக்குறை

பறக்கும் டாக்சிகளில் மின்கலனை மாற்றவோ, பயணிகள் டாக்சியிலிருந்து வெளியேற்றவோ, அவை நிறுத்துவதற்கு இடம் அவசியம்.

ஆனால் அவ்வாறு செய்வதற்கு, நகரங்களில் இடப் பற்றாக்குறை உள்ளது.

பாதுகாப்புத் தரம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை

பறக்கும் டாக்சிகளின் எடை குறைவாக உள்ளதால், காற்று பலமாக இருக்கும்போது, அவற்றைச் செயல்படுத்துவது ஆபத்தானது.

பறக்கும் டாக்சிகளில் ஒரு மோட்டார் பழுதானாலும், டாக்சி தொடர்ந்து செயல்படுவதற்கு பல்வேறு மோட்டார்கள் உண்டு என்று நிறுவனங்கள் கூறுகின்றன.

இருப்பினும், அரசாங்கங்கள்  விமானங்களுக்கான பாதுகாப்புத் தரத்தை டாக்சிகளும் பின்பற்றவேண்டும் என்று எண்ணுகின்றன.

இந்தச் சவால்களைத் தாண்டியப் பிறகு பறக்கும் டாக்சிகள் செயல்படுவது சாத்தியமாகலாம்.


Top