Images
  • sg hawker centre food court covid
    (கோப்புப் படம்: Rachel Phua) 

வரும் 21ஆம் தேதி முதல் உணவு-பானக் கடைகளில் அமர்ந்து உண்ண அனுமதி

கிருமிப்பரவல் நிலவரம், வரும் வாரங்களில் கட்டுக்குள் இருந்தால் இம்மாதம் 21ஆம் தேதியிலிருந்து உணவு, பானக் கடைகளில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த இடங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படவேண்டும்.

குழுக்களுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளி, ஒரு மேசையில் ஐவர் மட்டும் அமர அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும்.

பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

உணவு உண்ணவும், பானம் அருந்தவும் மட்டும் முகக்கவசங்களைக் கழற்றலாம். இதர நேரங்களில் அவற்றை அணிந்திருப்பது கட்டாயம் என்பது நினைவூட்டப்படுகிறது. 

Top