Images
  • food
    (கோப்புப் படம்: Reuters/Thomas Peter) 

உதவிக்குழுக்கள் உதவி தேவைப்படுவோரைப் பற்றித் தகவல்கள் பெற புதிய வழி

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, உணவு ஆதரவை மேலும் ஒருங்கிணைக்க, உதவி பெறுவோர் பற்றிய தகவல் தொகுப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

உதவிக்குழுக்கள் உதவி தேவைப்படுவோரைப் பற்றிய கூடுதலான தகவல்கள் பெற்றுக்கொள்ள, அது வகைசெய்யும்.

சிங்கப்பூரில் 10 குடும்பங்களில் ஒன்று, கடந்த ஒர் ஆண்டில் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியதாக அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கண்டறியப்பட்டது.

Food Bank Singapore அமைப்பும், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் சமூகப் புத்தாக்க நிலையமும் இணைந்து அந்த அறிக்கையை வெளியிட்டன.

1200 குடும்பங்களிடம் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.

உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கும் சுமார் 60 விழுக்காட்டினர், ஒன்று அல்லது இரண்டு அறை வீடுகளில் வசிக்கின்றனர்.

குறைவான கல்வித் தகுதியுள்ள குடும்பங்களும் உணவுப் பாதுகாப்பின்மையை உணரக்கூடும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

22 விழுக்காட்டுக்கும் குறைவானோர் மட்டுமே உணவு ஆதரவைப் பெறுவதாகத் தெரிய வந்தது.

அவர்களில் சிலர், உதவி பெறத் தயங்குவதாகக் கூறினர்.

வேறு சிலரோ, ஆதரவை எங்குப் பெறுவது என்று தெரியவில்லை எனக் குறிப்பிட்டனர்.

உணவு ஆதரவை மேம்பட்ட முறையில் வழங்க, சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு இடையில் ஒத்துழைப்பு அவசியம் என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது. 

Top