Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Eng's Heritage உணவக நச்சுணவுச் சம்பவத்தில் 26 பேர் பாதிப்பு - உணவகத்தின் உரிமம் தற்காலிக ரத்து

Northpoint City கடைத்தொகுதியில் உள்ள Eng's Heritage உணவகத்தில் நச்சுணவுச் சம்பவத்தில் 26 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உணவகத்தின் உரிமம்  தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளதாய் சிங்கப்பூர் உணவு அமைப்பும் சுகாதார அமைச்சும் தெரிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -
Eng's Heritage உணவக நச்சுணவுச் சம்பவத்தில் 26 பேர் பாதிப்பு - உணவகத்தின் உரிமம் தற்காலிக ரத்து

(படம்: Facebook/ENG's Wantan Noodle)

Northpoint City கடைத்தொகுதியில் உள்ள Eng's Heritage உணவகத்தில் நச்சுணவுச் சம்பவத்தில் 26 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உணவகத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளதாய் சிங்கப்பூர் உணவு அமைப்பும் சுகாதார அமைச்சும் தெரிவித்துள்ளன.

இம்மாதம் 7ஆம் தேதிக்கும் 9ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் உணவகத்தில் உண்டவர்கள் நச்சுணவால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் ஐவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சீரான நிலையில் உள்ளனர். மேலும் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

உணவகத்தின் உணவுத் தயாரிப்பாளர்கள் அனைவரும் அடிப்படை உணவுத் தயாரிப்புப் பயிற்சிக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

உணவகம் அதன் வளாகம், கருவிகள், பாத்திரங்களை மீண்டும் சுத்தம் செய்ய வேண்டும் .

உணவகங்கள் நல்ல உணவுப் பாதுகாப்பையும் சுகாதார வழக்கங்களையும் கடைப்பிடிக்குமாறு அமைப்பு அறிவுறுத்தியது.

சுற்றுச்சூழல் பொதுச் சுகாதாரச் சட்டத்தை மீறுபவர்களுக்கு ஏதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்றது அமைப்பு. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்