Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க இறைச்சி, பானங்களைக் கைவிடும் வாடிக்கையாளர்கள்

சுற்றுப்புறத்தைப் பற்றிய கவலை அதிகரிக்க இறைச்சி வகை, போத்தலிலுள்ள பானங்கள் போன்றவற்றில் அதிகமாகச் செலவு செய்வதை வாடிக்கையாளர்கள் குறைத்துக்கொண்டுவருகின்றனர். 

வாசிப்புநேரம் -

சுற்றுப்புறத்தைப் பற்றிய கவலை அதிகரிக்க இறைச்சி வகை, போத்தலிலுள்ள பானங்கள் போன்றவற்றில் அதிகமாகச் செலவு செய்வதை வாடிக்கையாளர்கள் குறைத்துக்கொண்டுவருகின்றனர்.

பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்க வேண்டும் என்ற மனப்போக்கும் அதிகரித்து வருகிறது.
உலக அளவில் 65,000க்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அது தெரியவந்துள்ளது. 

ஐரோப்பிய நாடுகள், லத்தீன் அமெரிக்கா, ஆசியா ஆகிய இடங்களிலுள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் சுற்றுப்புறப் பிரச்சினைகள் குறித்து அதிக அக்கறையுடன் இருக்கின்றனர். அவர்களில் பாதிப் பேர் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கும் வகையில் செயல்படுகின்றனர். 

ஐரோப்பாவின் மேற்குப் பகுதியிலுள்ள வாடிக்கையாளர்கள் சுற்றுப்புறம் குறித்து ஆக அதிக அக்கறை காட்டுவதாகவும்,
ஆசியா, லத்தீன் அமெரிக்கா ஆகிய வட்டாரங்களில் சுற்றுப்புறம் குறித்த அக்கறை குறைவாகவுள்ளதாகவும் ஆய்வு தெரிவித்துள்ளது.

உலக வெப்பமயமாதலைக் கட்டுக்குள் கொண்டுவர இறைச்சியை உட்கொள்ளும் அளவைக் குறைக்க வேண்டும் என்று வெப்பநிலை மாற்றம் பற்றிய ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அரசாங்கங்களுக்கு இடையிலான குழு கடந்த மாதம் தெரிவித்திருந்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்