Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சக ஊழியருடன் சண்டையில் ஈடுபட்ட FoodPanda ஓட்டுநருக்குச் சிறை, பிரம்படி

சக ஊழியருடன் சண்டையில் ஈடுபட்ட FoodPanda விநியோக ஓட்டுநருக்கு இரண்டரை ஆண்டுச் சிறைத்தண்டனையும் 6 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
சக ஊழியருடன் சண்டையில் ஈடுபட்ட FoodPanda ஓட்டுநருக்குச் சிறை, பிரம்படி

படம்: Google Street View

சக ஊழியருடன் சண்டையில் ஈடுபட்ட FoodPanda விநியோக ஓட்டுநருக்கு இரண்டரை ஆண்டுச் சிறைத்தண்டனையும் 6 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

எங் குவான் ஹோங் என்ற ஆடவருக்கு உணவை விநியோகம் செய்யும் பணி இருந்தது. அவர் 29 வயது பாட்மென் சுபார்மானுடன் (Batman Suparman) இணைந்து அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

அவர்கள் ஒரே வட்டாரத்தில், உணவை விநியோகிக்கும் பணியில் இருந்தனர்.  இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின்போது அவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ காரணத்தால் வாக்குவாதம் மூண்டது.

அப்போது எங், நேரில் சந்தித்துப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள பாட்மெனுக்குச் சவால் விடுத்தார்.

நேரில் சந்தித்தபோது எங், போனாக் கத்தியைக் கொண்டு பாட்மெனைத் தாக்கினார். மோட்டார்சைக்கிள் தலைக்கவசத்தாலும் பாட்மென் சுபார்மான் தாக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு FoodPanda அலுவலகத்திலிருந்து ஊழியர்கள் வந்து எங்கைத் தடுத்து நிறுத்தினர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்