Images
  • Mr Ho Kwon Ping
    படம்: OCBC Bank

'சிங்கப்பூர் அரசியல் பற்றிய மலேசியப் பிரதமரின் கருத்து சரியல்ல'

மலேசிய முன்னைய அரசாங்கத்துக்கு நேர்ந்தது, மக்கள் செயல் கட்சிக்கும் நேரும் என்று நினைப்பது விவேகமற்றது என்று பான்யன் ட்ரீ (Banyan Tree) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் ஹோ குவான் பிங் கூறியிருக்கிறார்.

சிங்கப்பூர் மலேசிய அரசியல் நிலவரங்களை மிகவும் அணுக்கமாக ஒப்பிடமுடியும். ஆனால் அண்மையில் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது, மலேசியர்களைப் போல் சிங்கப்பூரர்களுக்கும் ஒரே அரசாங்கம் சலிப்புத் தட்டியிருக்கும் என்று கூறியதைப் பகிர்ந்துகொள்வது சரியானதாக இருக்காது 

என்றார் திரு ஹோ.

"இடையூறுகள் நிறைந்த காலக்கட்டத்தில் சிங்கப்பூர் அரசியலும் வர்த்தகமும்" என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். OCBC வங்கி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் அவரது உரை இடம்பெற்றது. 

"மலேசியாவின் முன்னைய அரசாங்கத்தின் ஊழல் அப்பட்டமாக அனைவரும் அறிந்த ஒன்று; அதுவே பாரிசான் நேசனல் கூட்டணியின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது" என்றார் திரு ஹோ.

"சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சியும், மலேசியாவின் பாரிசான் நேசனல் கூட்டணியும் வேரூன்றிய கட்சிகள். ஆனால் அதற்காக, சிங்கப்பூருக்கும் அதே நிலை நேரும் என்று பொருள்கொள்வது அபத்தமானது." என்றார் அவர்.

கடந்த மே மாதம் 9ஆம் தேதி நடந்த மலேசியத் தேர்தலில், எதிர்த்தரப்பாக இருந்த பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து டாக்டர் மகாதீர் பிரதமர் பொறுப்பேற்றார். 

மலேசியாவில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தின் தாக்கம், அண்டை நாட்டிலும் பிரதிபலிக்கும் என்று டாக்டர் மகாதீர், தி ஃபைனான்ஷியல் டைம்ஸ் (The Financial Times) நாளேட்டுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருந்தார். 


Top