Images
  • Ho Ching (1)
    (படம்: தொடர்பு, தகவல் அமைச்சு) 

Forbes-இன் உலகின் ஆற்றல்மிக்க 100 பெண்கள் பட்டியலில் இரு சிங்கப்பூரர்கள்

இந்த ஆண்டுக்கான உலகத்தின் ஆற்றல்மிக்க 100 பெண்கள் பட்டியலில் இரு சிங்கப்பூரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

ஆண்டுதோறும் Forbes சஞ்சிகையால் வெளியிடப்படும் இந்தப் பட்டியலில் 17ஆவது இடத்தில் ஹோ சிங்கும் (Ho Ching) 87ஆவது இடத்தில் ஜெனி லீயும் (Jenny Lee) இடம்பெற்றுள்ளனர்.

தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் உலகில் சவால்களைச் சமாளித்து தங்கள் துறைகளில் சாதித்துள்ள பெண்களை Forbes பட்டியலிடுகிறது.

மற்ற பெண்களுக்கு ஊக்கமளிப்பதற்காகவும் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவும் இவ்விருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Temasek நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஹோ சிங் கடந்த 16 ஆண்டுகளாக அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளார்.

GGV Capital நிறுவனத்தில் நிர்வாகப் பங்காளியாகப் பணிபுரிந்துவரும் ஜெனி லீ சீனாவின் பிரபலமான தொழில்முனைப்பு முதலீட்டாளர்களில் ஒருவர். 

Top