Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருக்கும் போக்கு குறையவேண்டும்; ஆனால் அவர்கள் எப்போதும் தேவை'

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொள்ளவேண்டும். இருப்பினும், கட்டுமானம் போன்ற துறைகளில் அவர்கள் தொடர்ந்து தேவைப்படுவர் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
'வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருக்கும் போக்கு குறையவேண்டும்; ஆனால் அவர்கள் எப்போதும் தேவை'

(கோப்புப் படம்: AFP)

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொள்ளவேண்டும். இருப்பினும், கட்டுமானம் போன்ற துறைகளில் அவர்கள் தொடர்ந்து தேவைப்படுவர் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

கட்டுமானம், பாதுகாப்பு, துப்புரவு போன்ற துறைகளில் குறைந்த வருமானம் ஈட்டும் வெளிநாட்டு ஊழியர்களை நம்பி இருப்பதைக் குறைத்துக்கொள்ள பல ஆண்டுகளாக அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது;
ஆனால், வெளிநாட்டு ஊழியர்கள் அறவே இல்லாமல் அத்துறைகள் நிலைத்திருக்கமுடியாது.

 என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரர்கள் இத்துறைகளில் பொதுவாகப் பணிபுரிய விரும்பாதது அதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக அமைச்சர் சான் தெரிவித்தார்.

சிங்கப்பூரர்கள் கட்டுமானம் போன்றவற்றைத் தாண்டி மற்ற பல துறைகளில் பணிபுரிய விரும்புவதாக அவர் சொன்னார்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகமாக உள்ளது. இவ்வேளையில், வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை சிங்கப்பூர் குறைக்கவேண்டும் என்பதன் தொடர்பில் அண்மை வாரங்களாக பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

ஆனால் அது பொருளியலில் மோசமான எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வர்த்தகத் தலைவர்கள் ஏற்கனவே கூறினர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்