Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சக ஊழியரின் மரணத்திற்குப் பொறுப்பேற்கச் சொல்லி வற்புறுத்திய கட்டுமானத் தள மேற்பார்வையாளருக்குச் சிறை

வேலையிட மரணச் சம்பவம் தொடர்பில் ZAP Piling கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளருக்கு 16 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
சக ஊழியரின் மரணத்திற்குப் பொறுப்பேற்கச் சொல்லி வற்புறுத்திய கட்டுமானத் தள மேற்பார்வையாளருக்குச் சிறை

(படம்: Manpower Ministry)


(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

வேலையிட மரணச் சம்பவம் தொடர்பில் ZAP Piling கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளருக்கு 16 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2016இல் நடந்த அந்தச் சம்பவத்துக்கு ஊழியரைப் பொறுப்பேற்க வற்புறுத்தியதன் மூலம் வேண்டுமென்றே நீதிக்கு இடையூறாக இருந்ததற்காக டே டொங் சுவானுக்கு 8 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு வேலை செய்ய அனுமதி இல்லாமலும் பொருட்களைத் தூக்கி வைப்பதற்கான திட்டமில்லாமலும் ஊழியரை பாரந்தூக்கியைப் பயன்படுத்தச் சொன்னதற்காக வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் டேக்கு மேலும் 8 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2016 ஜூன் 9 அன்று 6 கிராஞ்சி லிங்க்கிலுள்ள கட்டுமானத் தளத்தில் அடுக்கப்பட்டிருந்த 1.76 டன் எடை கொண்ட கம்பிகள் சரிந்து விழுந்ததில் ஆறுமுகம் இளங்கோ எனும் ஊழியர் மாண்டார்.

ஆறுமுகத்தின் மரணத்திற்கு மமுன் என்ற மற்றோர் ஊழியரைப் பொறுப்பேற்கச் சொல்லி டே வற்புறுத்தியிருக்கிறார்.

அந்த உரையாடலை மமுன் தம்முடைய கைத்தொலைபேசியில் இரகசியமாகப் பதிவுசெய்து மனிதவள அமைச்சிடம் ஒப்படைத்திருக்கிறார்.

ஊழியர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் விதத்தில் நடந்துகொள்பவர்களுக்கும் நீதிக்கு இடையூறாக இருப்பவர்களுக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று மனிதவள அமைச்சு கூறியது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்