Images
  • ICA
    படம்: Marcus Ramos

சிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள், வரும் திங்கட்கிழமையிலிருந்து கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியம் இல்லை என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.

அதன்மூலம் சோதனைச்சாவடிகளில் குடிநுழைவு நடைமுறைகள் துரிதப்படுத்தப்படும் என்றது ஆணையம்.

இதற்கு முன்னர், சிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகளின் கடப்பிதழ்களில் அவர்கள் புறப்படும் தேதியின் முத்திரை பதிக்கப்படும்.

ஆணையத்தின் அதிகாரிகள் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

2016ஆம் ஆண்டு முதல், சிங்கப்பூருக்குள் வரும்போது BioScreen முறையின்கீழ் தங்களின் கைரேகைகளைப் பதிவுசெய்யும் வெளிநாட்டுப் பயணிகள், தானியக்க தடங்களைப் பயன்படுத்தி வெளியேற முடிந்தது.

தற்போது அனைத்து வெளிநாட்டினருக்கும் அந்த முறை விரிவாக்கம் காண்கிறது.

புதிய மாற்றம் குறித்து வெளிநாட்டு ஆணையங்களிடம் தெரிவித்துள்ளதாக குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.


Top