Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வாடிக்கையாளர்களின் பணத்தைக் கையாடிய முன்னைய வழக்கறிஞருக்குச் சிறைத்தண்டனை

சிங்கப்பூரில் வாடிக்கையாளர்களை ஏமாற்றிய முன்னாள் வழக்கறிஞருக்கு ஈராண்டு, 3 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் வாடிக்கையாளர்களை ஏமாற்றிய முன்னாள் வழக்கறிஞருக்கு ஈராண்டு, 3 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Hilborne Law சட்ட நிறுவனத்தில் பணியாற்றிய 57 வயது ஸமிண்டர் சிங் கில் (Zaminder Singh Gill) சுமார் 31,000 வெள்ளியைக் கையாடியதாகக் கூறப்பட்டது.

நம்பிக்கை மோசடி தொடர்பான 5 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் 10 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

2018ஆம் ஆண்டு ஜனவரிக்கும், சென்ற ஆண்டு ஜூலை மாதத்துக்கும் இடையே சட்ட உதவி கோரிய ஐவரிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணத் தொகையை கில் தமது நிறுவன வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் சேர்க்கவில்லை.

அந்தத் தொகையைத் தமது குடும்பச் செலவுகளுக்கு அவர் பயன்படுத்தினார்.

பின்னரும் நிறுவனத்திற்கு அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தவில்லை.

வழக்கறிஞர் என்ற முறையில் நம்பிக்கை மோசடி செய்த குற்றத்துக்கு அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்