Images
  • crime
    படம்: Channel NewsAsia 

15 வயது மாணவியுடன் தகாத உறவு கொண்டிருந்த ஆசிரியருக்கு 16 மாதச் சிறை

சிங்கப்பூர்: 15 வயது மாணவியுடன் தகாத உறவு கொண்டிருந்த ஓர் இயற்பியல் துறை ஆசிரியருக்கு 16 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவி உயர்நிலை 1, 2 வகுப்புகளில் பயிலும்போது 34 வயது ஆடவர் அவருக்கு ஆசிரியராக இருந்தார்.

மாணவி ஆசிரியருடன் நெருக்கமாகப் பழகியதும், இருவரும் வகுப்பு நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களிலும் தொலைபேசியில் தொடர்புகொண்டிருந்ததும் வழக்கு விசாரணையில் தெரியவந்தது.

2016இல் ஆசிரியர் மாணவிக்கும் அவரது சகோதரிக்கும், அவர்கள் வீட்டில் துணைப்பாட வகுப்புகளை வாரந்தோறும் நடத்தி வந்தார்.

துணைப்பாட வகுப்புகளுக்குப்பின் மாணவியை ஆசிரியர் சிலமுறை உணவகங்களுக்கும் அழைத்துச் சென்றிருந்தார்.

மாணவியுடன் பாசிர் ரிஸ் பூங்காவுக்கு ஆசிரியர் சென்றிருந்தபோது, மாணவி ஆசிரியரின் மடியில் உட்கார்ந்திருந்ததை அங்கிருந்த காவல் அதிகாரிகள் கண்டனர். பின்னர் மாணவியின் பெற்றோரை அழைத்துத் தகவல் கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆசிரியர்மீது மாணவியின் தந்தை புகார் கொடுத்தார்.

16 வயதுக்குக் குறைவான நபருடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக ஆடவர்மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

முதல்முறை குற்றம் புரிந்த அவருக்கு அதிகபட்சமாக $10,000 அபராதத்துடன் 5 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம்.


உங்கள் கருத்து

Top