Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சத்துமிக்க அரிசி

வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சத்துமிக்க அரிசி

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றால் அதிக பாதிப்புக்கு உள்ளானவர்கள், தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள்.

இந்தக் காலக்கட்டத்தில் அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் முக்கியம்.

அதனைக் கருத்தில்கொண்டு, AGWO தொண்டூழிய அமைப்பு விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அன்றாடம் 12,000 உணவுப் பொட்டலங்களை வழங்கிவருகிறது.

ஊட்டச் சத்தும் வைட்டமின்களும் நிறைந்திருக்கும் அரிசியைக் கொண்டு அந்த உணவுப்பொட்டலங்கள் தயாரிக்கப்படுவதை உறுதிசெய்ய Foodness Asia நிறுவனம் கைகொடுத்துள்ளது.

சுமார் 100 டன் அரிசியை சத்துமிக்கதாக மாற்றித்தர அது உதவியுள்ளது.

தொண்டூழிய அமைப்புக்கு உதவுவதிலும், வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சத்தான உணவுகளைத் தருவதிலும் அக்கறை கொண்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.

சத்தூட்டப்பட்ட உணவால் பொதுவாக உடல் ஆரோக்கியமாக இருக்கும், உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைப்பதால் அது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்