Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

28,000 வெள்ளிக்கும் மேலான மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - நால்வர் கைது

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, போதைப்பொருள் குற்றவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைதுசெய்துள்ளனர். அதிகாரிகள் பறிமுதல் செய்த போதைப்பொருட்களின் மதிப்பு 28,000 வெள்ளிக்கும் மேல் என மதிப்பிடப்படுகிறது.

வாசிப்புநேரம் -
28,000 வெள்ளிக்கும் மேலான மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - நால்வர் கைது

படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, போதைப்பொருள் குற்றவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைதுசெய்துள்ளனர். அதிகாரிகள் பறிமுதல் செய்த போதைப்பொருட்களின் மதிப்பு 28,000 வெள்ளிக்கும் மேல் என மதிப்பிடப்படுகிறது.

சந்தேக நபர்களில் ஒருவரான 36 வயதுப் பெண், ஜூரோங் கேட்வே ரோட்டில் கைதுசெய்யப்பட்டார். அவரின் வாகனத்திலிருந்து 935 கிராம் கஞ்சா, 118 கிராம் ஐஸ் போதைப்பொருள், 8 கிராம் கெட்டமைன் போதைப்பொருள்,  1000 எரிமின்-5 (Erimin-5) மாத்திரைகள், 125 எக்ஸ்டசி மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அந்தப் பெண்ணுடன் காணப்பட்ட 30 வயது மலேசிய ஆடவரிடமிருந்து 2,150 வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 35வயது சிங்கப்பூர்ப் பெண் பிடோக் நார்த் ஸ்திரீட் 1-இல் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து சிறு அளவிலான கஞ்சா கைப்பற்றப்பட்டது.

சம்பவம் தொடர்பில் 42 வயது சிங்கப்பூர் ஆடவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்களின் நடவடிக்கைகள் மீது விசாரணை தொடர்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்