Images
  • France Defence
    (படம்: Facebook / Ng Eng Hen) 

சிங்கப்பூர், பிரான்ஸ் இடையே வலுவான உறவு வளர்ந்து வருகிறது: தற்காப்பு அமைச்சர்

சிங்கப்பூருக்கும் பிரான்ஸிற்கும் இடையிலான இரு தரப்பு உறவானது, வளர்ந்து வரும் வலுவான உறவு என்று சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (Ng Eng Hen)கூறியுள்ளார்.

பிரான்ஸின் அர் ஸோ (Ar Zoh) ஆகாயப் படைத் தளத்துடன் சிங்கப்பூர் ஆகாயப் படை கொண்டிருக்கும் 20ஆம் ஆண்டு நினைவுகூர்ந்தார் அவர்.

பிரான்ஸில் உள்ள அந்த ஆகாயப் படைத் தளத்தில், இரு நாட்டுக்கும் இடையிலான தற்காப்பு ஒத்துழைப்பு குறித்த நீண்ட வரலாற்றையும் அவர் விவரித்தார்.

1998ஆம் ஆண்டு முதல், 190க்கும் அதிகமான சிங்கப்பூர் விமானிகள் அங்கு பயிற்சி பெற்றிருப்பதை, அவர் குறிப்பிட்டுக் கூறினார்.

பிரான்ஸிற்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டு அங்கு சென்றிருக்கும் பிரதமர் லீ சியென் லுங்கின் பேராளர் குழுவில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர் இங், இன்று (ஜூலை 13) பின்னேரத்தில் பிரான்ஸின் ஆகாயப் படை அமைச்சரை சந்திக்கவிருக்கிறார்.

Top