Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிரதமர் லீ பிரான்ஸிற்கு மேற்கொண்டுள்ள மூன்று நாள் பயணம்

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், இன்று (ஜூலை 13) தொடங்கி பிரான்ஸிற்கு மூன்று நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோனின் (Emmanuel Macron) அழைப்பை ஏற்று அவர் அங்கு செல்கிறார்.

வாசிப்புநேரம் -
பிரதமர் லீ பிரான்ஸிற்கு மேற்கொண்டுள்ள மூன்று நாள் பயணம்

(படம்: Xabryna Kek/ CNA)

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், இன்று (ஜூலை 13) தொடங்கி பிரான்ஸிற்கு மூன்று நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோனின் (Emmanuel Macron) அழைப்பை ஏற்று அவர் அங்கு செல்கிறார்.

பிரான்ஸின் தேசிய தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும்படி, பிரெஞ்சு அதிபர் மெக்ரோன், சிங்கப்பூர் பிரதமர் லீயிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஒவ்வோர் ஆண்டும், பிரான்ஸின் தேசிய தினமான பஸ்டில் (Bastille) தினத்தின் போது நடைபெறும் தேசிய தின அணிவகுப்பில், பிரெஞ்சு அதிபர் வெளிநாடு ஒன்றை இணைந்துகொள்ளும்படி அழைப்பது வழக்கம்.

கடந்த ஆண்டு கொண்டாட்டங்களில், திரு. மெக்ரோன், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்.

அதுபோல, இவ்வாண்டு சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் பிரான்ஸின் தேசிய தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.

திரு. லீ, பிரெஞ்சு அதிபர் மெக்ரோன் வழங்கவிருக்கும் அதிகாரப்பூர்வ அரசு விருந்திலும் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் லீயுடன், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (Ng Eng Heng), வர்த்தகத் தொழில் அமைச்சர் சான் சூன் சிங் (Chan Chun Sing) ஆகியோர் உடன் செல்லவிருக்கின்றனர்.

பிரதமர் லீ, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் காலகட்டத்தில், துணைப் பிரதமர் தியோ சீ ஹியென் (Teo Chee Hean), தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பு வகிப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. அதன்படி, இன்று தொடங்கி வரும் திங்கட்கிழமை வரை, துணைப் பிரதமர் தியோ, தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பு வகிப்பார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்