Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச 'வாய் கொப்பளிக்கும் திரவம்'

சிங்கப்பூரில் ஒவ்வொரு வீட்டிற்கும், 250 மில்லி லிட்டர் 'வாய் கொப்பளிக்கும் திரவம்' (mouth gargle) இலவசமாக அளிக்கப்படவுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச 'வாய் கொப்பளிக்கும் திரவம்'

(படம்: Temasek Foundation)

சிங்கப்பூரில் ஒவ்வொரு வீட்டிற்கும், 250 மில்லி லிட்டர் 'வாய் கொப்பளிக்கும் திரவம்' (mouth gargle) இலவசமாக அளிக்கப்படவுள்ளது.

கிருமிப்பரவலைக் குறைக்க உதவுவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட Stay Prepared திட்டத்தின் கீழ், துமாசிக் அறநிறுவனம் அவற்றை வழங்குகிறது.

புதினா சுவை கொண்ட அந்த povidone-iodine (PVP-I) வாய் கொப்பளிக்கும் திரவம், தொண்டைக் கரகரப்பை ஏற்படுத்தும் கிருமிகளைக் கொல்லக்கூடியது என்று அறநிறுவனம் கூறியது.

SP குழுமத்தின் தண்ணீர்க் கட்டணச் சீட்டுக் கணக்கு எண் கொண்ட அனைத்து வீடுகளுக்கும் அது விநியோகிக்கப்படும்.

அதைப் பெற விரும்புவோர் அடுத்த மாதம் (நவம்பர்) 15ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை இணையத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

அவற்றைச் சுமார் 40 இடங்களிலிருந்து நவம்பர் 22 முதல் டிசம்பர் 12 வரை பெற்றுக்கொள்ளலாம்.

ஓரறை முதல் நான்கறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிப்போருக்குக் கூடுதலாக 125 மில்லிலிட்டர் வாய் கொப்பளிக்கும் திரவம் வழங்கப்படும்.

அவை Singapore Post அஞ்சல் சேவை மூலம் இம்மாதம் 25ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 19ஆம் தேதி வரை அனுப்பிவைக்கப்படும்.

அதற்காகப் பதிவு செய்யத் தேவையில்லை.

-CNA/ic 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்