Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தடையற்ற வர்த்தகத்திற்கு எதிரான சூழ்நிலை நிலவும் வேளையில் பலதரப்பு ஒத்துழைப்பை நாடுகள் தொடரவேண்டும்: பிரதமர் லீ

தடையற்ற வர்த்தகத்திற்கு எதிரான சூழ்நிலை நிலவும் இவ்வேளையில் பலதரப்பு ஒத்துழைப்பை நாடுகள் தொடரவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
தடையற்ற வர்த்தகத்திற்கு எதிரான சூழ்நிலை நிலவும் வேளையில் பலதரப்பு ஒத்துழைப்பை நாடுகள் தொடரவேண்டும்: பிரதமர் லீ

(படம்: REUTERS/Feline Lim)

தடையற்ற வர்த்தகத்திற்கு எதிரான சூழ்நிலை நிலவும் இவ்வேளையில் பலதரப்பு ஒத்துழைப்பை நாடுகள் தொடரவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

ஜப்பானிய வர்த்தக,தொழில் சபையின் 50வது ஆண்டுநிறைவின் கலந்துரையாடலில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

சிங்கப்பூர் வட்டார நிலையில் விரிவான பொருளியல் பங்காளித்துவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

அதில் நிறைய முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இலக்குகளை அடைய முயற்சிகள் தொடரவேண்டும் என்று பிரதமர் லீ குறிப்பிட்டார்.

அதில் ஜப்பானுக்கு முக்கியப் பங்கு உள்ளது.

ஜப்பான் வட்டார நிலையிலான விரிவான பொருளியல் பங்காளித்துவத்திற்கு ஆதரவு அளித்தால், பிற நாடுகளும் பங்குபெற அது ஊக்கம் அளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் மூப்படையும் மக்கள்தொகையைச் சமாளிப்பதைப் பற்றி ஜப்பானிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்