Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

KTV நிலையத்திலிருந்து சந்தைகள் வரை..கிருமிப்பரவல் ஒரு பார்வை

சிங்கப்பூரில் சமூக அளவில் COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் சமூக அளவில் COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

சமூக அளவில் கிட்டத்தட்ட எந்த ஒரு சம்பவமும் பதிவாகாமல் இருந்த நிலையில், 10 நாட்களுக்கு முன் KTV நிலையங்களில் கிருமித்தொற்று பதிவாகத் தொடங்கியது. பின் ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகம், சந்தைகளுக்குப் பரவியது.

KTV நிலையத்திலிருந்து சந்தைகள் வரை..ஒரு பார்வை

ஜூலை 12

3 KTV நிலையங்களில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. அவை நோய்த்தொற்றுக் குழுமமாக உருமாறின.

குறிப்பிட்ட நிலையங்களுக்குச் சென்றிருந்தோருக்குச் சிறப்பு நோய்த்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

(கோப்புப்படம்:  Facebook/10 Dollar KTV Club)

ஜூலை 13

KTV நிலையங்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் 12க்கு அதிகரித்தது.

ஜூலை 14

KTV நிலையங்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் 54க்கு அதிகரித்தது.

ஜூலை 15

KTV நோய்த்தொற்றுக் குழுமத்தில் 88 சம்பவங்கள் பதிவாகின. 

ஜூலை 16

ஹோங் லிம் ஈரச்சந்தை, உணவு நிலையம் (Hong Lim Market & Food Centre), ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகம் (Jurong Fishery Port) ஆகியவற்றில் நோய்த்தொற்று.

(படம்: Google Street View)

7 சம்பவங்கள் பதிவாயின.

KTV நோய்த்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையோர்: 120 பேர்

ஜூலை 17

ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகம் மூடப்பட்டது.

துறைமுகத்திற்குச் சென்ற மீன் விற்பனையாளர்கள் மூலம், ஹோங் லிம் சந்தைக்கும், சொங் பூன் சந்தைக்கும் கிருமி பரவியிருக்கலாம் என கூறப்பட்டது.

(படம்: Ili Nadhirah Mansor/TODAY)

(படம்: Ili Nadhirah Mansor/TODAY)

11 ஈரச்சந்தைகளில் பணியாற்றும் மீன் விற்பனையாளர்களிடையே கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

மீன் விற்பனையாளர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என உத்தரவிடப்பட்டது.

துறைமுக நோய்த்தொற்றுக் குழுமம்: 19 பேர்

மேலும் 6 KTV நிலையங்களுக்குக் கிருமித்தொற்று பரவியிருக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

KTV குழுமம்: 148 பேர் 

ஜூலை 18

சந்தைகளின் மீன் கடைகளை மூடும்படி உத்தரவிடப்பட்டது.

சொங் பூன் (Chong Boon) ஈரச்சந்தை, உணவு நிலையம் மூடப்பட்டது.

ஹெய்க் ரோட் (Haig Road) சந்தை உணவு நிலையம், ஜூரோங் சென்ட்ரல் பிளாசா (Jurong Central Plaza), ஷுன்ஃபூ மார்ட் (Shunfu Mart) ஆகிய இடங்களில் பணிபுரியும் மீன் கடைக்காரர்களுக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

( படம்:  AFP )

( படம்:  AFP )

துறைமுக நோய்த்தொற்றுக் குழுமம்: 63 பேர்

மேலும் 4 KTV நிலையங்களுக்குக் கிருமி பரவியிருக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

KTV குழுமம்: 173 பேர் 

ஜூலை 19

ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகம், KTV நிலையங்கள் அகியவற்றின் நோய்த்தொற்றுக் குழுமங்கள் தொடர்புடையவை என்று கூறப்பட்டது.

கிருமிப்பரவலால் பாதிக்கப்பட்ட ஈரச்சந்தைகளில் கட்டாய SafeEntry பதிவுமுறை அமல்படுத்தப்பட்டது.

(படம்: கீர்த்திகா பெருமாள்)

துறைமுக நோய்த்தொற்றுக் குழுமம்: 179 பேர்

மேலும் 2 KTV நிலையங்களுக்குக் கிருமி பரவியிருக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

KTV குழுமம்: 193 பேர் 

ஜூலை 20

மொத்தம் 35 சந்தைகள், உணவங்காடி நிலையங்களில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவானதாகத் தகவல் வெளியானது.

(படம்: Google Street View)

படம்: Google Street View

ஹெய்க் ரோடு (Haig Road) சந்தை, உணவு நிலையத்திலும், சொங் பாங் (Chong Pang) சந்தையிலும் மொத்தம் 35 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று.

துறைமுக நோய்த்தொற்றுக் குழுமம்: 321 பேர்

அது சிங்கப்பூரின் ஆகப் பெரிய நோய்த்தொற்றுக் குழுமம் ஆனது.

மேலும் ஒரு KTV நிலையத்துக்குக் கிருமி பரவியிருக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

KTV நோய்த்தொற்றுக் குழுமம்: 207 பேர் 

ஜூலை 21

ஹெய்க் ரோடு சந்தை, சொங் பாங் சந்தை ஆகியவை மூடப்பட்டன.

கிளமெண்டி (Clementi) புளோக் 448 ஈரச்சந்தை, உணவு நிலையத்திலும், வாம்ப்போ டிரைவ் (Whampoa Drive) ஈரச்சந்தையிலும் மொத்தம் 34 பேருக்குக் கிருமித்தொற்று.

(படம்: Calvin Oh, Google Street View)

படம்: Calvin Oh, Google Street View

துறைமுக நோய்த்தொற்றுக் குழுமம்: 454 பேர்

மேலும் ஒரு KTV நிலையத்தில் கிருமித்தொற்று.

KTV நோய்த்தொற்றுக் குழுமம்: 215 பேர்

ஜூலை 22

கிளமெண்டி புளோக் 448 சந்தை, வாம்ப்போ டிரைவ் சந்தை ஆகியவை மூடப்பட்டன.

உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு தடை.

ஒன்றுகூடல்களில் இருவர் மட்டுமே என்ற விதிமுறை மீண்டும் அமலுக்கு வந்தது.

இரண்டாம் கட்ட உயர்த்தப்பட்ட விழிப்புநிலைக்குத் திரும்பியது சிங்கப்பூர்.

ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகம், ஹோங் லிம் சந்தை, உணவங்காடி நிலையத்துடன் தொடர்புடையவர்கள்: 541 பேர்.

KTV குழுமம்: 220 பேர் 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்