Images
  • hawker centre
    (படம்:Gaya Chandramohan)

சிங்கப்பூரில் முன்னிலை வர்த்தகங்களைப் பிரதிநிதிக்கும் குழுக்கள் முன்வைத்துள்ள வேண்டுகோள்கள்

சிங்கப்பூரில், உணவு-பானம், சில்லறை, சேவை ஆகிய துறைகளில், 35,000 முன்னிலை வர்த்தகங்களைப் பிரதிநிதிக்கும் குழுக்கள், சில வேண்டுகோள்களை முன்வைத்துள்ளன.

வாடகைத் தள்ளுபடி, சம்பள ஆதரவு, கடன்களைச் செலுத்தும் காலத்தை நீட்டித்தல் போன்றவை அவற்றில் அடங்கும்.

அடிக்கடி மாறிவரும் கட்டுப்பாடுகளால் வர்த்தகங்களைத் தொடர்ந்து நடத்துவது சிரமமாகிவரும் நிலையில், அந்த வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 16 மாதங்களில், சேவை வழங்குவோரும் சில்லறை வர்த்தகர்களும் சொத்து உரிமையாளர்களிடம் ஒன்றிணைந்து கூடுதல் ஆதரவு கேட்பது, இது இரண்டாவது முறை.

விற்பனை சரிந்துள்ளதால், அதற்கேற்ப வாடகையைக் குறைக்குமாறு சிலர் கோரிக்கை விடுத்தனர்.

முன்னிலை வர்த்தகங்களில், பத்திலிருந்து இருபது விழுக்காடு வரையிலானவை மூடப்பட்டுவிட்டதாக
SGTUFF எனும் வாடகைதாரர்கள் கூட்டமைப்பு மதிப்பிடுகிறது.

கூடுதல் ஆதரவு கிடைக்காமற்போனால், இன்னும் அதிகமான வர்த்தகங்கள் அந்த நிலைக்குத் தள்ளப்படலாம் என அது எச்சரித்தது.

வாடகையைச் சீரமைப்பதில் உதவத் தயாராய் இருப்பதாக, சில கடைத்தொகுதி நிர்வாகங்கள் கூறின.  

Top