Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விமான நிலையப் பயணப்பைகளில் வில்லைகளை மாற்றிப்பொருத்திய ஆடவருக்குச் சிறை

விமான நிலையத்தின் பயணப்பைகளில் உள்ள வில்லைகளை மாற்றிப் பொருத்திய ஆடவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
விமான நிலையப் பயணப்பைகளில் வில்லைகளை மாற்றிப்பொருத்திய ஆடவருக்குச் சிறை

படம்: AFP/Roslan Rahman

விமான நிலையத்தின் பயணப்பைகளில் உள்ள வில்லைகளை மாற்றிப் பொருத்திய ஆடவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சாங்கி விமான நிலையத்தில் அத்தகைய 286 பயணப்பைகளில் இருந்த வில்லைகளை அவர் மாற்றிப் பொருத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் அவை வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டன.

66 வயது தே பூன் கே (Tay Boon Keh) என்ற அந்த ஆடவர், நிறுவனத்தின் மீது அதிருப்தியடைந்திருந்ததாகவும், நிறுவனத்தில் தாம் சரியாக நடத்தப்படவில்லை என்றும் சொன்னார். அதனால் ஏற்பட்ட வெறுப்பில் வில்லைகளை மாற்ற முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.

2016 நவம்பருக்கும், 2017 பிப்ரவரிக்கும் இடையே, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சில்க் ஏர் விமானப் பயணிகளின் பயணப்பைகளில் இத்தகைய மாற்றத்தைச் செய்ததைத் தே ஒப்புக்கொண்டார்.

அவர் சாங்கி விமான நிலையக் குழுமத்தின் துணை குத்தகைதாரர் நிறுவனமான Lian Cheng Contracting நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

குறும்புத்தனமாகப் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதற்காக அவர் மீது 20 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அதற்கு நிகரான மேலும் 266 குற்றச்சாட்டுகளும் பதிவுசெய்யப்பட்டன.

அவருக்கு 20 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்