Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'எரிபொருளை எங்கு குறைந்த விலைக்கு வாங்குவது?' - உதவுகிறது புதிய இணையத் தளம்

கடன்பற்று அட்டைகள் மூலம் எரிபொருளை வாங்குவோருக்கான சிறந்த சலுகைகளை விரல் நுனியில் தெரிவிக்கிறது Fuel Kaki எனும் புதிய இணையத் தளம்.

வாசிப்புநேரம் -
'எரிபொருளை எங்கு குறைந்த விலைக்கு வாங்குவது?' - உதவுகிறது புதிய இணையத் தளம்

(படம்: Consumers Association of Singapore)

கடன்பற்று அட்டைகள் மூலம் எரிபொருளை வாங்குவோருக்கான சிறந்த சலுகைகளை விரல் நுனியில் தெரிவிக்கிறது Fuel Kaki எனும் புதிய இணையத் தளம்.

சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் அறிமுகம் செய்துள்ள இணையத் தளம், எரிபொருள் குறித்த முழுமையான தகவல்களை வழங்குவதுடன் சந்தையில் உள்ள போட்டித்தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது.

சரியான விலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள பயனீட்டாளர்களுக்குப் பெரியளவில் கைகொடுக்கிறது Fuel Kaki இணையத் தளம்.

சரியான சலுகைகளையும் தள்ளுபடித் திட்டங்களையும் பயன்படுத்தினால் எரிபொருளுக்கான கட்டணத்தில் 20 விழுக்காடு வரை குறைக்க முடியும் என போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் 2017இல் நடத்திய கருத்தாய்வு குறிப்பிடுகிறது.

ஆனால், பரவலாகவும் சிக்கலாகவும் இருக்கும் திட்டங்களால் பயனீட்டாளர்களுக்கு முழுமையான தகவல்கள் கிடைப்பதில்லை.

அதை நிவர்த்தி செய்யும் நோக்கில் Fuel Kaki இணையத்தளத்தை உருவாக்கியுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டது.

தற்போதைக்கு ExxonMobil நிறுவனம் மட்டுமே அதன் Esso நிலையங்களில் உள்ள எரிபொருள் விலைகளை ஆணையத்திடம் தெரிவிக்கிறது.

அதேபோல இதர எரிபொருள் நிறுவனங்களிடமிருந்தும் தகவல்களைப் பெற ஆணையம் முற்படுகிறது.

எனினும், வாகனங்களில் எரிபொருளை நிரப்ப விலையை மட்டும் கருத்தில்கொள்வதில்லை என்று சில வாகன ஓட்டுநர்கள் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்