Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அமைச்சரவையில் வேறு சில மாற்றங்கள்

பிரதமர் லீ சியென் லூங், அமைச்சரவை மாற்றங்களை அறிவித்திருக்கிறார்

வாசிப்புநேரம் -

பிரதமர் லீ சியென் லூங், அமைச்சரவை மாற்றங்களை அறிவித்திருக்கிறார்.

மாற்றங்கள் அடுத்த மாதம் முதல் தேதி நடப்புக்கு வரும்.


மற்ற சில மாற்றங்கள்:

திரு பே யாம் கெங் மூத்த நாடாளுமன்றச் செயலாளராகப் பதவி உயர்வு பெறுகிறார். போக்குவரத்து அமைச்சில் அவர் புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வார். கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சில் அவர் தமது பொறுப்புகளைத் தொடர்வார்.

திரு அம்ரின் அமின் மூத்த நாடாளுமன்றச் செயலாளராகப் பதவி உயர்வு பெறுகிறார். அவர் சுகாதார அமைச்சிலும், உள்துறை அமைச்சிலும் வகித்த பொறுப்புகளைத் தொடர்வார்.

திரு ஹெங் சீ ஹாவ் தற்காப்பு அமைச்சில் மூத்த துணையமைச்சர் பொறுப்பை ஏற்பார். அவர் பிரதமர் அலுவலக அமைச்சில் வகித்த பொறுப்பைக் கைவிடுவார்.

திருவாட்டி சிம் ஆன் தகவல், தொடர்பு அமைச்சில் மூத்த துணையமைச்சராகப் பொறுப்பேற்பார். கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சில் வகித்த பொறுப்பை அவர் தொடர்வார். வர்த்தக, தொழில் அமைச்சில் பொறுப்புகளைக் கைவிடுவார்.

திரு சீ ஹொங் டாட் வர்த்தக, தொழில் அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றில் மூத்த துணையமைச்சராக நியமிக்கப்படுவார். தொடர்பு, தகவல் அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றில் வகித்த பொறுப்புகளிலிருந்து விலகுவார்.

டாக்டர் ஜனில் புதுச்சேரி போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கிறார். தகவல், தொடர்பு அமைச்சில் இதுவரை வகித்த வந்த பொறுப்புகளைத் தொடரவிருக்கும் டாக்டர் புதுச்சேரி கல்வி அமைச்சில் வகித்த பொறுப்பைக் கைவிடுவார்.

டாக்டர் கோ போ கூன் தேசிய வளர்ச்சி அமைச்சில் வகித்துவந்த பொறுப்பைக் கைவிடவிருக்கிறார். ஆனால் வர்த்தக, தொழில் அமைச்சில் மூத்த துணையமைச்சராகத் தொடர்வார்.

திரு சாம் டான் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சில் துணையமைச்சர் பொறுப்பை ஏற்பார். வெளியுறவு அமைச்சில் பொறுப்புகளைத் தொடர்வார். மனிதவள அமைச்சு, பிரதமர் அலுவலக அமைச்சில் வகித்துவந்த பொறுப்புகளை அவர் துறப்பார்.

குமாரி லோ யென் லிங் மனிதவள அமைச்சில் மூத்த நாடாளுமன்றச் செயலாளராகப் பொறுப்பேற்பார். கல்வி அமைச்சில் அவர் தமது பணியைத் தொடர்வார். ஆனால், வர்த்தக, தொழில் அமைச்சில் வகித்துவந்த பொறுப்பைக் கைவிடுவார்.


கூடுதல் பொறுப்புகள்:
திரு ஹெங் சுவீ கியெட், தேசிய ஆய்வு அறக்கட்டளை தொடர்பான அம்சங்களில் பிரதமருக்கு உறுதுணையாக இருப்பார். அந்தப் பொறுப்பை அவர் துணைப்பிரதமர் தியோ சீ ஹியெனிடமிருந்து ஏற்றுக்கொள்வார்.

திரு சான் சுன் சிங்கிடம் பொதுச் சேவைப் பிரிவு தொடர்பான பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். அந்தப் பொறுப்பை அவர் துணைப்பிரதமர் தியோ சீ ஹியெனிடமிருந்து ஏற்றுக்கொள்வார். மக்கள் கழகத்தின் துணைத் தலைவர் பொறுப்பில் திரு சான் தொடர்வார்.

திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி இனி முஸ்லிம் விவகாரங்களுக்கான பொறுப்பை ஏற்பார். டாக்டர் யாக்கோப்பிடமிருந்து அவர் அதை ஏற்றுக்கொள்வார்.

டாக்டர் ஜனில் புதுச்சேரி, இணையப் பாதுகாப்புப் பொறுப்புகளை டாக்டர் யாக்கோபிடமிருந்து ஏற்றுக்கொள்வார்.


புதிய நியமனங்கள்:

திரு எட்வின் தோங், சட்ட, சுகாதார அமைச்சுகளில் மூத்த துணையமைச்சர் பொறுப்பை ஏற்பார். அவரது நியமனம், ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வரும்.

திரு ஸாகி முகமது தேசிய வளர்ச்சி அமைச்சு, மனித வள அமைச்சு ஆகியவற்றுக்கான துணையமைச்சராக நியமனம் பெறுவார்

குமாரி சன் ஷுவலிங் உள்துறை அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு ஆகியவற்றுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளராக நியமிக்கப்படுவார்.

டாக்டர் டான் வூ மெங் வெளியுறவு அமைச்சு, வர்த்தக, தொழில் அமைச்சு ஆகியவற்றுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளராக நியமனம் பெறுவார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்