Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டு ஊழியருக்கான தீர்வையில் கூடுதல் சலுகை

கட்டுமானம், கப்பல் பட்டறை, ரசாயன ஆலைகள் ஆகிய துறைகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வையில் கூடுதல் சலுகை வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சு கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -
வெளிநாட்டு ஊழியருக்கான தீர்வையில் கூடுதல் சலுகை

(படம்: AFP/Roslan Rahman)

கட்டுமானம், கப்பல் பட்டறை, ரசாயன ஆலைகள் ஆகிய துறைகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வையில் கூடுதல் சலுகை வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சு கூறியுள்ளது.

அதற்கென அரசாங்கம் மேலும் 320 மில்லியன் வெள்ளியை ஒதுக்கவுள்ளது.

கட்டுமான ஆதரவுத் திட்டத்தின்கீழ் ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட 1.36 பில்லியன் வெள்ளி தொகையோடு இந்தக் கூடுதல் ஆதரவுத் தொகையும் வழங்கப்படும்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வையில் வழங்கப்படும் கழிவுகள் இவ்வாண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜூலை - 100%
ஆகஸ்ட் - 100%
செப்டம்பர் - 100%
அக்டோபர் - 75%
நவம்பர்- 50%
டிசம்பர்- 25%
ஜூலை மாதத்திற்கான தீர்வையில் 50 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்று முன்னர் கூறப்பட்டது.

அது 100 விழுக்காடு கழிவாக மாற்றப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

தீர்வையைச் செலுத்திய நிறுவனங்களுக்குப் பணம் திருப்பிக்கொடுக்கப்படும்.

மெல்ல மெல்ல குறைக்கப்படும் கழிவுகள் நிறுவனங்கள் தாக்குப்பிடிப்பதற்குக் கூடுதல் அவகாசம் வழங்கும் என்று அமைச்சு கூறியது.

வேலை அனுமதிச் சீட்டு அல்லது S Pass வைத்திருக்கும் ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியருக்கும் 750 வெள்ளி ரொக்கத்தை முதலாளிகள் மேலும் இரண்டு மாதங்களுக்குப் பெறுவர்

ஜூலை - $375
ஆகஸ்ட் - $375
செப்டம்பர் - $375
அக்டோபர் - $90
நவம்பர்- $90
டிசம்பர்- $90
2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை - $90

ஆகஸ்ட் , செப்டம்பர் மாதங்களில் ஒவ்வோர் ஊழியருக்கும் 90 வெள்ளி வழங்கப்படும் என்று முன்னர் கூறப்பட்டது.

அது 375 வெள்ளி அதிகரிக்கப்படும் என்று என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

வர்த்தகங்கள் COVID-19 நெருக்கடி நிலையிலிருந்து மேலும் வலிமையுடன் மீண்டுவர அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்