Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

G20 உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் பிரதமர் லீ

பிரதமர் லீ சியென் லூங், இந்த வார இறுதியில் G20 உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

பிரதமர் லீ சியென் லூங், இந்த வார இறுதியில் G20 உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

காணொளி மூலம் நடைபெறும் மாநாட்டை சவுதி அரேபியா ஏற்றுநடத்துகிறது.

கிருமிப்பரவலிலிருந்து மீண்டுவருதல், வேலைகளையும், பொருளியல் வளர்ச்சியையும் மீட்டெடுத்தல்,மீள்திறன் கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய உலகச் சமூகத்தை உருவாக்குதல் ஆகியவை குறித்து G20 தலைவர்கள் கலந்துரையாடுவர்.

சிங்கப்பூர், ஸ்பெயின், சுவிட்சர்லந்து, வியட்நாம் உள்ளிட்ட 7 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அதில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் லீயுடன், நிதியமைச்சு, வெளியுறவு அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும் மாநாட்டில் கலந்துகொள்வர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்